கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் |
உலகக் கல்விப் பரப்பிற் கல்வியியல் தொடர்பான மரபுவழிக் கருத்துக்களையும் மாற்றுக்கருத்துக்களையும் அறிந்துகொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் இந்நூலாக்கம் முகிழ்த்துள் ளது. இவ்வாறான ஒரு நூலின் தேவையைக் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் நண்பர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நண்பர் பேராசிரியர் மா.செல்வராஜா அவர்களும் என்னிடத்துக் கூறியதுடன் ஆக்க முயற்சிக்குக் காணும் போதெல்லாம் ஊக்கம் தந்தனர். இந்நூலாக்கத்துக்கு வேண்டிய உசாவல் நூல்களை அவர்கள் தந்துதவியவேளை, தேசிய கல்வி நிறு வகத்திலிருந்து மேலும் பல நூல்களை நண்பர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் அவர்களும், கல்வி அமைச்சிலிருந்து நண்பர் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களும் தேடிவந்து தந்தனர். இந்நண் பர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள். கல்வியியலில் மாற்றுச் சிந்தனைகளின் தேவையை நூல் வடிவிலே தரும்படி வேண்டிக் கொண்ட நண்பரும் 'கூடம்', 'அகவிழி', 'ஓலை' ஆகிய மூன்று சஞ்சிகைகளின் ஆசிரியருமாகிய தெ.மதுசூதனன் அவர்கள் உற்சாகம் தரும் நண்பராகி இயங்கிக் கொண்டிருத்தலையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. |